பு.கஜிந்தன்
மாவட்ட செயலகத்தில் காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் – நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டத்தில்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட காணிப் பிரிவில் இரு உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் ஒருவர் சுயீன விடுமுறையில் உள்ளதால் விரைவு காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதக அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது,
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற கணி பதிவாளர் நாயகப் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டும் இருவர் மட்டுமே தற்போது கடமையில் உள்ளதாக அறிய முடிகிறது.
மாவட்ட காணிப் பிரிவுக்கு ஏற்கனவே தென் இலங்கை அரசியல் செல்வாக்கின் மூலம் வெளி மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பான்மையின உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அநேகமானவர்கள் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று தமது சொந்த மாகாணங்களுக்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இரு உத்தியோகத்தர்கள் மட்டும் குறித்த பிரிவில் கடமையாற்றுவதாகவும் ஒருவர் சுகயீன விடுமுறையில் நிற்பதால் துரித சேவையினை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தில் உள்ள காணிப் பிரிவில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் தமது காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்ற நிலையில் நியமிக்கப்பட்ட ஆளனியினர் தொடர்பில் யார் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விடையம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.