கனடிய தமிழர் காங்கிரஸ் நடத்தும் இவ்வருடத்திற்குரிய Street Festival-2023 மாபெரும் விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது.
இந்த விழாவில் இரண்டு நாட்களும் இனிய பாடல்களை வழங்க தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றுள்ள பாடகர் சாந்தன் கோகுலன் அவர்கள் சனிக்கிழமை 26ம் திகதி இரவு ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
காலஞ் சென்ற தாயகப் பாடகரும் வன்னி மண்ணில் வாழ்ந்தவருமான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 3வது புதல்வரான கோகுலனின் கனடா வருகை இங்கு அவரது ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
சனிக்கிழமை விழாவில் முதல்நாள் இறுதி நேரத்தில் சில பாடல்களை மேடையில் வழங்கிய கோகுலன் இன்று 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல பாடல்களைப் பாடி கனடா வாழ் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யவுள்ளார்.
இங்கே காணப்படும் படங்களில் சனிக்கிழமை இரவு அவரை ரொரன்ரோ விமான நிலையத்தில் வரவேற்ற சங்கர் நல்லதம்பி அவர்கள் கோகுலனுக்கு மலர்க் கொத்தை வழங்குவதையும் அருகில் திரு. திருமதி லோகேந்திரலிங்கம் ஆகியோர் நிற்பதையும் மேலும் பாடகர் கோகுலனின் நண்பர்கள் பலர் அவரை வரவேற்பதையும் படங்களில் காணலாம்.