வடக்கு மாகாணத்தில் பல செயலர்கள் தீடீர் மாற்றம் இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலர் சனிக்கிழமை (26) அன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் செயலாளராக தற்போதைய மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் திருவாகரன் நியமிக்கக்பட்டுள்ளார்.
இதேபோன்று தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் பொ.வாகீசன் மகளிர விவகார அமைச்சின் செயலாளராகவும், தற்போதைய உள்ளூராடசி அமைச்சன. சிரேஸ்ட உதவிச் செயலாளர் நந்தகோபன் ஆளுநர் செயலக பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாற்றங்களில் தற்போதைய மகளிர் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளதோடு தற்போதைய பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாமாக-பணியாற்றும் குகநாதன் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் பதில் பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்