நண்பர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் விடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தெருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன். எனவே இலங்கையிலும் எனக்கு பொறுப்புக்களும் பணிகளும் அதிகரித்து விட்டன”
இவ்வாறு இன்று சனிக்கிழமை மதியம் கனடாவிலிருந்து தாயகம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் மதிய போசம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் கனடாவில் தான் சந்தித்த நண்பர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் விடைபெற்றபோது தெரிவித்தார்.
கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘தமிழர் திருவிழா 2023’ கட்ந்த வாரம் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது என்பதும் அதில் இலட்சக்கணக்கான பார்வையாளர் கலந்து கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.