தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடகங்கவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமை குறித்தும் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் இனவாத பிரச்சாரங்கள் மற்றுத் இனவாத நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.