இறையதினம் (03), கனடாவில் வசிக்கும் க.தில்லைநாதன் அவர்களது நிதி அனுசரணையில், சித்தன்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஊடாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
60 பல்வேறு வட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60 பேருக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் விசேட தேவையுடைய 3 மாணவருக்கு தலா 5000/ மாதாந்த உதவி தொகை கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
மேலும், பொன்னாலை கிருஷ்ணன் கோயிலில் வைத்து, 12 விசேட தேவை உடைய குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பொருட்களும், 2000 ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டன . இதற்கான நிதி அனுசரணையை கனடா வாழ் தர்மசிறிராஜன் சுகந்தி அவர்கள் வழங்கினார்.