பு.கஜிந்தன்
கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த யதீஸ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இரு சந்தேகபர்கள் நேற்றையதினம் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமாலை பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை புரட்டாதி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.