பு.கஜிந்தன்
கிளநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசமோட்டை பகுதியில் இன்றைய தினம் (03.09.2023) இரவு ஏழு முப்பது மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
அவர் தனது வீட்டுக்கு நோக்கி உழவு இயந்திரத்தில் பயணித்த பொழுது வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.