வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா இரண்டாம் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் இன்று (04.09) மாலை வெளியாகின.
குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா விஞ்ஞான பிரிவில் 03 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், அகில இலங்கையில் 68வது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் சைவப்பிரகாச மகளீர் கல்லூரி விஞ்ஞான பிரிவில் மூவரும், கணித பிரிவில் இருவரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் வர்த்தக பிரிவில் பண்ணிரெண்டு பேரும், கலைப்பிரிவில் இருபத்தியொரு பேரும் ஏனைய பிரிவுகளில் ஆறு மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.