(5-09-2023)
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று(5) முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அகழ்வு செய்வதற்காக தொல்பொருள் திணைக்களம் இணக்கம் கண்டு அதற்கான பாதீடுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதியினை இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி செயலகம் ஊடாக நிதியை விடுவித்து கொடுத்துள்ளது.
இதற்கான நிதி கையாளல்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் நிர்வகிக்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட திகதியான இன்று (05) மனித புதைகுழி அகழ்வு முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று குறித்த பகுதிக்கு திணைக்கள அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ள துடன் இது தொடர்பான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஏற்பட்ட வானிலை சீரின்மை காரணமாக இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் நாளை (6)காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொலீசார்,சட்ட வைத்திய அதிகாரிகள்,தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள்,தொல்பொருள் பேராசிரியர்கள்,ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணிகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.