2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின.
அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
வெற்றியீட்டிய மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
எனது அப்பா விஜயகுமார். அம்மா சூரியகுமாரி. எனக்கு 5 சகோதரர்கள். எனது அப்பா ஒரு விவசாயி. வறுமையின் மத்தியில் மிகவும் கஷ்டப்பட்டு என்னை உயர்கல்வி கற்க வழிவகுத்தார்.
எனது இந்த வெற்றிக்கு எனது சகோதரர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் என அனைவரும் உதவிபுரிந்தார்கள். முன்பள்ளியில் இருந்து என்னை கற்பித்த அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
கடந்தகால வினாத்தாள்களையாம், மாதிரி வினாத்தாள்களையும் அதிகம் படித்து வெற்றியீட்டியுள்ளேன். நீண்டநேரம் கண்விழித்து படிப்பதை விட கடந்தகால வினாத்தாள்தளை கற்றே இலகுவாக வெற்றியீட்டினேன்.
எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மல்லாவி பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஆசைபாபடுகின்றேன் என குறிப்பிட்டார். 27