பு.கஜிந்தன்
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் 6ம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது
மாயவன், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தேரேறி வெளிவீதியில் உலா வந்து கிருஷ்ண பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த உற்சவத்தில் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு, கிருஷ்ணப்பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றதுடன் பல பக்தர்கள் தூக்குகாவடி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
இவ் ஆலயத்தின் பிரம்மோற்சவம் கடந்த 22.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நாளை மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும்.
























