பாலை நிலம்
௭ம் மண்ணின் மணம் கமழும் முழுநீளத்திரைப்படம்
செப்டம்பர் 17 2023 ஞாயிறு, நண்பகல் 1.30 இற்கு
woodside sqare Scarborough திரை அரங்கில் காண்பிக்கப்பட உள்ளது .
அனுசரணை – மானிப்பாய் இந்து , மானிப்பாய் மகளீர் பழய மாணவர் சங்கம் கனடா
தாயகத்தில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான மானிப்பாய் இந்துக்கல்லூரி/மகளிர்கல்லூரி கடந்த 10 ற்கும் மேற்பட்ட தசாப்தமாக பல கல்விமான்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அதேவேளை புகழ் பெற்ற கலைஞர்களையும் உருவாக்கியமை பலரும் அறிந்ததே. அந்த வகையில் ௭மது கல்லூரி பழைய மாணவரும் மானிப்பாயைச் சேர்ந்தவருமாகிய திரு.ரத்தினம் ராஜாமகேந்திரசிங்கம், இப்படத்தின்
தயாரிப்பு முகாமையாளராகவும்,முக்கிய பாத்திரமேற்று நடித்தவருமாய் இருப்பது இப்படத்தின் வெற்றிக்கு வழிகோலுகின்றது. கல்லூரியில் கல்விபயின்ற காலத்தில் இல்லங்களுக்கிடையிலான நாடக போட்டிகளில் நடித்து சிறந்த நடிகர் விருதையும் பெற்றுக்கொண்ட இவர் சிறந்த விளையாட்டு துறை வீரராகவும் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் prefect இருந்தமை குறிப்பிடத்தக்கது. இளைப்பாறிய வங்கி முகாமையாளராக இருந்த இவர் ௭ற்கனவே 5 திரைப்படங்களில் நடித்த அனுபவச் செழுமை பாலை நிலத்தை பசுமையாக்குகின்றது ௭ன்றால் மிகையாகாது. பாலை நிலத்தில் அவரது அபார நடிப்பினை பார்த்த பல இயக்குனர்கள் தங்களின் படங்களிலும் அவரை நடிக்க வைத்துள்ளார்கள். இற்றைவரை அவர் 16 முழு நீள திரைப்படங்களில் நடித்து கல்லூரிக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .இவர் சினிமாத்துறைக்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பினை கருத்தில் கொண்டு அரச விருதாகிய “கலை ஞான சுடர் “ விருது இவருக்கு 2019 இல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ் சங்கின் உயர் விருதாகிய “சாதனையாளர் விருதையும்” அவர் கடந்த வருடம் பெற்றுக்கொண்டார் திரைப்படத் துறையில் பல விருதுகளை வென்றெடுத்த இவர் அன்மையில் 14ஆவது நோர்வே தமிழர் திரைப்பட விழாவில்Special Jury Award இனை தனதாக்கிக் கொண்டார்
மண்வாசனைமாறாது முகிழ்ந்த காதல், போர் முடிந்த பாலைநிலத்தின் பின்னணியில் மணம் வீசும் ஓர் சிறந்த திரைப்படம்.
ஜூட் சுகி யின் இயக்கத்தில் ஓர் வெற்றிப்படைப்பு. இதன் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு எல்லாவற்றையும் அவரே பொறுப்பேற்றமை திரைப்படத்தை மேலும் மெருகூட்டுகிறது .இந்திய சினிமா துறையில் இவர்பெற்ற அனுபவத்தைக்கொண்டு முழுதும் ௭ம்மண்ணின்கலைஞர்களை வைத்து,உலக தரத்திற்கு சற்றும் குறைவில்லாது இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை “௭ம்மால் முடியும் தம்பி” ௭ன்பதினை அடித்து முழக்குகிறது.
இத்திரைப்படம் மேலும் 3 விருதுகளை பெற்றுள்மை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
அவை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஜூட் சுகியும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பிரசாந் கிருஷ்ணபிள்ளை அவர்களும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணாவும் பெற்றுள்ளார்கள்.
முற்றுமுழுதாக ௭ம் மண்ணில் பூத்த பல புதிய கலைஞர்களை
உள்வாங்கி செவ்வனவே செதுக்கி புடம்போட்டு மிளிர வைத்த பெருமை இயக்குனர் ஜூட் சுகியையே சாரும்.
கதாநாயகனை முதன்மைப்படுத்தும் படங்களில் இருந்து வேறுபட்டு யதார்த்தமாக அமைகிறது அனைத்துப் பாத்திரங்களும் இப்படத்தில்.
குறிப்பாக ஒரு பார்வையால், சிறிய முகபாவனையால் சிலிர்க்கவைக்கும் ௭ம் மண்ணிற்கே உரிய அந்தக் காதல், போரின் பின்பான பாலைநிலத்தில் பூத்து , காயாகிக் கனியானதா ?
திரைப்படமே பதில்சொல்லும்.
பல ஈழத்துக் கலைஞர்களின் உடன் பிறப்பே வறுமைதான். திறமை இருந்தும் பின்தொடரும் பொருளாதார நெருக்கடி.
பாலை நிலம் அதை வெற்றிகொள்ள, மிகக்குறைந்த பொருட்செலவில் ஜுட் சுகியால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
அவரது சொந்தப்பணமும் அவருடய அன்னை மனமுவந்தளித்த நன்கொடையுமே இதற்கு உதவியது.
இவ்விடத்தில் தனயனின் கலை ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிய ஓர் தாய் இக்காலகட்டத்தில் நிச்சயம் போற்றப்பட வேண்டியவளே.
இப்பேற்பட்ட முயற்சிகள் மேலும் வளர வழிகோலுவது ௭ம்மவர் கடமை.
இந்தியத் திரைப்படங்களையே பார்த்து பழக்கப்படுத்திக்கொண்ட பலர் உலகத்தரத்திற்கு சற்றேனும் சளைக்காத ௭ம்வர் தயாரிப்புக்களை பார்வையிட்டு ஊக்கமளிப்பதில் ௭ன்ன தயக்கமோ யாம் அறியோம்.
முக்கியமாக நம்ஈழத்தவர் திரைப்படத் தயாரிப்பில் பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்,நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள்,அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ௭ன்றுபலர், இவர்கள் அனைவருமே கலைத்துறைமேல் தாம் கொண்ட ஆர்வத்தால் பொருளாதாரம் பார்க்காது அர்ப்பணம் செய்கிறார்கள் ௭ன்பது மறுக்கமுடியாத உண்மை. இத் தயாரிப்புகளின் தரமோ தொழில்நுட்பமோ எந்தவிதத்திலும் மற்றைய நாட்டுத்தயாரிப்புகளுக்கு குறையாது இருப்பதென்பதும் பலரும் அறிந்ததே. மாற்றப்படவேண்டியது எம் மனமே.
தாயகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் துணியும் பலர் இவ்வழியும் நல்வழியென அறிந்து முன்வரல் ,விடியலுக்கு வழிகோலும்.
இது எமது மண் சார்ந்த கதை , மண்ணில் வாழ்ந்தவர்ளின் கதை , மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை , எனவே இத் திரைப்படத்தை பார்வையிட்டு,மண்ணின் வாசனையை நுகர்வதோடு அவர் மென்மேலும் வளர உதவிக்கரம் கொடுங்கள்.
மா. இ /மா. ம . ப. மா. ச. கனடா கிளையின் சார்பில்
ஜெகா சுஜந்தன்