வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ்.கரவெட்டி கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் 06.09.2023 (புதன்கிழமை) ஆரம்பமானது. இந்த கட்டுமானத்திற்காக 35 மில்லியன் ரூபா தொகை செலவிடப்படவுள்ளது.
கரவெட்டி பிரதேசத்தில் கோவிற்சந்தை கிராம மக்கள் தற்காலிக கட்டிடத்தில் இதுவரையில் தமது வியாபார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்காலிக கட்டடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், நுகர்வோரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய வணிக இடம் அமைப்பது மக்களுக்கு பெரும் தேவையாக உள்ளது.
புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையுடன் இணைந்து கோவிற்சந்தை பிரதேச மக்களும் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இவ்வாறானதொரு அபிவிருத்தித் திட்டத்திற்கு பிரதேச மக்களிடம் இருந்து அதிகளவான பங்களிப்புகளை பெற்றுக் கொள்வது நாட்டிற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்தார்.