பு.கஜிந்தன்
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன்விழா!
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக பாடசாலையிலிருந்து மாணவிகளில் துவிச்சக்கர வண்டி பவனி ஆரம்பாமனது.
பவனியானது வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதி ஊடக சென்று அங்கிருந்து நவிண்டில் சந்திவை சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டி சந்தியை அடைந்து பின்னர் அங்கிருந்து வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முன்றலை அடைந்தது.
வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முன்றலிலிருந்து மாணவிகள், பழைய மாணவிகள், நடை பவனியை ஆரம்பித்தனர்.
நடைபவனி பாடசாலை முன்றலை அடைந்து நிறைவடைந்தது.
இதேவேளே நாளைய தினம் காலை 9:00 மணியிலிருந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
இன்றை இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேளை பாடசாலை மணவிகளின் துவிச்சக்கர வண்டி, பவனியில் மாணவிகள் சென்றபோது அயல் பாடசாலைகளான அப்பா பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி ஆகிய பாடசாலைகள் அமோக வரவேற்பளித்து நீராகரம் வழங்கிவைத்தனர்.