ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது.
ஐ நாவின் அறிக்கையும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று தமிழ் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த பேரவையின் கூட்டத்தில் பங்குபெற பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களுடன் கூடிய பிரத்தியேக காணொளி.