‘ஜெயில்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த துஷாரா விஜயன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலனே இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அநீதி படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலும் ஆஹா தளத்திலும் வெளியாகியுள்ளது.