(14-09-2023)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார நிறுவனங்களில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான தாபன விதிக்கோவை தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு இன்று (14) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ்.வீ.வாஜிதா தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ராமகுட்டி, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ்.வீ.வாஜிதா ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுகின்ற குறித்த உத்தியோகத்தர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நிர்வாக நடைமுறைகள் மற்றும் நிதிப் பிரமாணங்கள், சுகாதாரத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாகவும் வளவாளர்களினால் இந்நிகழ்வின்போது விரிவுரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.