மன்னார் நிருபர்
15-09-2023
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.
தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.