பு.கஜிந்தன்
யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன இன்றையதினம் ஒன்றிணைந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர். இந்த மகஜர் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாரதப் பிரதமர்,
மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கட்கு.
இலங்கை, இந்திய மீனவர் தொடர்பானது.
இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களிற்கும் இந்திய மீனவர்களிற்கும் இடையிலே இழுவைப் படகினால் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதான பிரச்சணை நீண்டகாலமாக தொடர்ந்த வண்ணமே உள்ளது. தாங்கள் பதவியேற்ற பின்பு 2016 ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி டில்லியில் இரு நாட்டின் வெளவவகார அமைச்சு மட்டத்தில் இராஜதந்திரப் பேச்சுக்கள் இடம்பெற்று ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதை இரு நாட்டு மீனவ சமூகமும் ஏற்றுக்கொண்டு அதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது இரு நாட்டு அரசுகளும் இந்தப் பேச்சின்போது எட்டப்பட்ட தார்மானங்களை முன்கொண்டு செல்ல வடக்கு மீனவ சமூகம் தங்களை வேண்டி நிற்கின்றது.
தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை, இந்திய மீனவர் பிரச்சணை அரசியலாக்கப்பட்டு அரசிஇயல் கட்சியின் உறிப்பினர்கள் மீனவர்கள் என்ற பெயரிலும் கூட்டுறவு ஜனநாயக கட்டமைப்புக்களை செயலிலக்க வைத்து அதன் ஊடாக அரசியல் கட்சி ஓன்றின் பிரதிநிதிகளும் அதன் ஆதாரவாளர்களும் இணைந்து உண்மையான மீனவ பிரதிநிதிகளை ஓரம்கட்டும் செயலபாடு அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் தான் சார்ந்த ஈ.பி.டி.பி கட்சியினரை மட்டுமே உள்வாங்கிச் செயல்பட்டு சங்கங்களை உருவாக்கி வருகின்றார்.
தற்போது இரு நாட்டு மீனவர் பிரச்சணையும் பேச்சுவார்த்தைகள் என்ற ரீதியிலே பேசுபொருளாக உள்ளது. ஆகையால் 2016ஆம் ஆண்டு எட்டப்பட்ட தீர்மானத்தின் அடப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் 2016ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட பிரதிநிதிகளை இணைத்து தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதோடு தற்போது உள்ள கட்சி ஆதாரவாளர்களைக் கொண்டுள்ள அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதனையோ அவர்கள் மீனவ பிரதிநிதிகள் எனக் கூறுவதனையோ இதன் கீழ் கையொப்பமிடும் சங்கங்கள் சமாசங்கள் விருப்பவில்லை எனபதனையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தற்போது இருநாட்டு தொப்புள்கொடி உறவுக்கு தடையாக இருக்கும் இழுவைமடித் தொழிலை இலங்கை கடற்பரப்பிற்குள் நிறுத்தி இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் வாழ்வாதரத்தை நடாத்த ஆவண செய்வீர்கள் என நம்புகின்றோம் – என்றுள்ளது.