2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் – சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
கடந்த 9ம் 10ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற 2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவிற்கான திரைப்படங்கள் திரையிடப்பட்ட முறையில் விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் பற்றிய விபரங்கள் வெளியிடப்பெற்றுள்ளன.
இந்த வருடத்தின் ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்படவிழாவிற்கு தமிழ்த் திரைப்படங்கள் மாத்திரமல்ல வேற்று மொழிப் படங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் காட்டப்பெற்ற இரண்டு நாட்களும் வேற்று மொழி பேசும் திரைப்பட ரசிகர்களும் அங்கு கலந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களை கண்டு களித்தனர்.
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் நிறுவனரும் அதிபருமான செந்தூரன் நடராஜா அவர்களின் தலைமையில் இயங்கிய தெரிவுக் குழுவினர் இந்த படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாண்டிற்கான திரைப்பட விழாவின்சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் மணிகண்டன் ஆவார்.
மேற்படி திரைப்பட விழாவின் முடிவுகள் தொடர்பாக வெளியிட்பபெற்றுள்ள அறிவித்தலில்ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் நிறுவனரும் அதிபருமான செந்தூரன் நடராஜா அவர்களின் தலைமையில் இயங்கிய தெரிவுக் குழுவினர் பின்வருமாறு அறிவித்துள்ளனர்
The Toronto Tamil International Film Festival family and jury extend a warm congratulations to these award winners who have positively shaped the world of film and storytelling.
Jury Award
Jury Award Best Feature Film:
————————-
The Last Farmer – கடைசி விவசாயி (Director: Manikandan M)
Jury Award Best Short Film: Power of Compassion (Director: David Li)
Jury Award Best Feature Film Director: AMUDHAVANAN P (Vindhya Victim Verdict V3)
Jury Award Best Feature Documentary Film: Trace (Director: Sonia Oduwa Aimiumu)
Jury Award for Best Actress: Sai Pallavi (Movie: Gargi)
Audience Award
Audience Award Best Feature Film: Yaathisai (Director: Dharani Rasendran)
Audience Award Best Short Films: Two worlds (Director: Nithya Gopalakrishnan)
Special Jury Award:
———————
Best Feature Film: Yenni Thuniga (Director: SK Vetri Selvan)
Award for Best Thriller Feature Film: AGRINAI – RGB (Director: THANESH PERRABU)
Best Film on Social Issues Feature Film: KUDIMAHAAN (Director: Prakash Nagarajan)
Best Short Documentary Film: Boundary Village (Director: Sivanantham Virushan)
Best Costume Design: Silver Screen Dreams (Director: David Li)
Best Covid19 Film: Apoorva (Director: Bravinth Raveendran)
-Honorable Mention
————————-
Best Short Film : Backspace (Director: Vivekanandan Ravichandran)
Best Short Film : Thedal (Director: Venkat Arunachalam)
Best Film on Social messages Short Film: A Second Chance (Director: Branavi Raveendran)
Special Jury Award: Outstanding Performance
———————————————–
Award for Best Debut Director: Dhilipkumar Rajendran (Movie: Dhill Dhilip)
Award for Best Actor: Srithar (Movie: Innocent)
Award for Best Child Artist: Gamsa Kumar (Movie: Apoorva)
Award for Best Supporting Actor: Kethiri Sudhakar Reddy (Movie: The Group (Balagam))
Awards For Album Song
——————————
Award for Best Album Song: Nenjil Pirandhaval (Karthik Mohan)
Award for Best Album Song (Honorable Mention): Amma (Uday Prakash, Mathavan Maheswaran)
வெற்றியீட்டிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிக நடிகைகள் ஆகியோருக்கும் இரண்டுநாட்களும் திரையிடப்பெற்ற திரைப்படங்களை பார்வையிட்டவர்களுக்கும் கனடா உதயன் நிறுவனம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
Post Views: 834