பு.கஜிந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது .
இதேவேளை நாளையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை மறுதினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கபடவுள்ளது.