(மன்னார் நிருபர்)
(20-09-2023)
வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் 1ம் இடம் பெற்று சாதனை படைத்த நிலையில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (20) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் வலயக்கல்வி பணிமனை ஏற்பாடு செய்த குறித்த கௌரவிப்பு நிகழ்வு பிரதி கல்வி பணிப்பாளர் பி.ஞானராஜ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகரத்தில் இருந்து வலயக்கல்வி அலுவலகம் வரை சாதனையாளர்கள் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது.
.
இதன் போது மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜி.டி.தேவராஜா,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள்,அதிபர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மன்னார் வலயம் 720 புள்ளிகளை பெற்று 52 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தி உள்ளது.
இவ்வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் மன்னார் வலயம் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.