இலங்கையின் வடக்கே சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. கடலட்டை பண்ணைகள் அமைப்பது, கடற்பகுதிகளை ஆக்கிரமிப்பது, தொழிற்சாலைகள் அமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை குறிவைப்பது பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், ராஜபக்ச-ரணில் தலைமையிலான அரசுகள் சீனாவிற்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து அண்டை நாடான இந்தியா போதியளவில் அக்கறை கொள்ளவில்லை என தமிழ் மக்கள் நீண்டகாலமாக விசனம் கொண்டுள்ளனர்.
அவ்வகையில் வியாழக்கிழமை (21 செபடம்பர்) அன்று பெரிய அளவிலான சீனக்குழுவொன்று வவுனியாவில் வந்திறங்கி அங்குள்ள மக்களுக்கு இரவோடிரவாக சில உதவிகளை அளித்துள்ளனர். இந்த செய்தி உள்ளூர் ஊடகவியலாளர்கள் அல்லது சிவில் சமூகத்தினர், உள்ளூர் அதிகாரிகள் என யாருடைய பார்வைக்கும் வராமல் இராணுவத்தின் உதவியுடனேயே இந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\
இராணுவத்தின் ஏற்பாட்டில் சீனா மற்றும் மலேசிய பிரஜைகளால் 500 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் செய்தியாளர்களுக்கு கூட இதை அறிந்திருக்கவில்லை.
சீனா-மலேசியா குழுவினரால் வழங்கப்பட்ட உதவிகளை பெற்றுக்கொண்டவர்களின் விவரங்கள் கூட இதுவரை வெளியே தெரியவில்லை.
வவுனயா நகர சபை மண்டபத்தில்இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகளுடன் அதிக சீனர்களும், மலேசியர்களும் பங்குகொண்டு இவ் உதவிகளை வழங்கி வைத்தனர்.
பாடசாலைப் பொதிகள் , உணவுப் பொதிகள் என வழங்கப்பட்ட நிகழ்வில் பெளத்த துறவிகள் பலரும் பங்குகொண்டிருந்ததோடு மாவட்டத்தின் மேலதிக அரச அதபரும் கலந்துகொண்டிருந்தார்.
நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான சன்ஹாவோ கல்விக் காயம் முகாம் என சீன மொழியில் எழுதப்பட்ட பாடசாலைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உதவிகளை பெற்ற பயனாளிகள் யார், எதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன, இந்த நிகழ்வில் பௌத்த துறவிகளின் பங்கேற்பு ஏன், இதர மத தலைவர்கள் அழைக்கப்பட்டார்களா என்ற கேள்விகளுக்கு பதிலில்லை.