பு.கஜிந்தன்
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.