தியாக தீபம் திலீபன் அவர்களது 36வது ஆண்டு நினைவேந்தலானது இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
அவர் 12 நாட்கள் நீராகாரம் கூட அருந்தாமல், இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா விரதம் இருந்து, இதே நாளில் மு.ப 10.48 மணியளவில் இவ்வுலகை விட்டு நீக்கினார். அந்தவகையில் அவர் இவ் உலகை விட்டு நீங்கிய நேரத்திற்கு இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தியாக தீபத்தின் நினைவாக மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.