முதல் இடத்தைப் பெற்ற அழகுச் செல்வி மெலிசா மாணிக்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன….
கனடாவின் ஸ்காபுறோ நகரில் திருமதி சசிகலா நரேந்திரா மற்றும் அவரது கணவர் திரு நரேந்திரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பெற்று அழகும் அறிவும் பண்பாட்டுக் கோலங்களும் கொண்டு விளங்கும் இளம் மங்கையைத் தேர்ந்தெடுக்கும் போட்டி வரிசையில் இவ்வருடத்திற்குரிய Miss Tamil Universe-2023 மாபெரும் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.
ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஐந்நூறுக்கும் அதிகமாக பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து இராஜாங்க கல்வி அமைச்சர் அரவிந்தகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமண்ட் சோ அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அன்றைய வெற்றிக்குரிய இளம் மங்கையைத் தேர்ந்தெடுக்கும் போட்டி மூன்று கட்டங்களைக் கொண்டதாக விளங்கியது.
இறுதியில் நடுவர்கள் போட்டி முடிவுகளை அறிவித்தார்கள்.
முதல் இடத்தைப் பெற்ற அழகுச் செல்வி மெலிசா மாணிக்கத்திற்கு கிரீடம் அணிவிக்கப்பெற்று பரிசுகளும் வழங்கப்பெற்றன. இரண்டாவது இடத்தை மாலினி ரவீந்திரனும் மூன்றாவது இடத்தை நிசிகா சுவாமிநாதனும் தட்டிக் கொண்டார்கள்.