லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சத் தத், அர்ஜூன் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக இசைவெளியீட்டு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற தகவல்கள் பரவி வந்தன. ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாவது பாடலானா பேடாஸ் பாடலி படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைக்க இப்பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பாடலின் காணொளி வலையொளி தளத்தில் 1 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.