வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீத்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து கற்கோவளத்து அடியவர்கள் வல்லிபுரத்து ஆலள்வாரையும் பரிவார மூர்திகளையும் ஆஞ்சனேயர் முன்னே செல்ல, காவிச் சென்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்திலே சக்கரத்து ஆழ்வார் என்று சொல்லுகின்ற வல்லிபுரத்து ஆழவார் தீத்தமாடினான்.
கடந்த 14/09/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வல்லிபுரத்து ஆழ்வார் திருவிழாவின் 16ம் நாளா இன்று புரட்டாது பௌர்ணமியிலே தீத்த உற்சவம் இடம் பெறுவது வழமையாகும்.
இன்றைய வல்லிபுரத்து அழ்வார் சமுத்திர தீத்த உற்சவத்திற்க்கு வடமராட்சி, யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் அடியார்கள் சுமர் இரண்டு இலட்சம் வரையான அடியவர்கள் வருகைதந்திருந்தனர்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியர்கள் திருவிழாவில் சிறப்பு பூசைகளை மேற்கொண்டனர்.
இலங்கை போக்குவரத்து சபை, வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவை என்பன அடியவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கியிருந்தன.
இதே போன்று பருத்தித்துறை பொலீசார், இலங்கை முதலுதவி சங்கத்தினர், இந்து சமய தொண்டர் சபை, சாரணர்கள் , இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், முதலுதவி மற்றும் ஒழுங்குபடுத்தல் சேவைகளை வழங்கினர். மேலும் பருத்தித்துறை பிரதேச சபையினர் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
தாக சந்தி ஆலய சூழலில் மட்டுமல்ல வடமராட்சி எங்கும் அடிவர்களால் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
பல அடியார்கள் தூக்கு காவடி, பாற்காவடி, கற்பூர சட்டி போன்ற பல்வேறு நேற்றிக் கடன்களையும் நிறைவேற்றினர்.
நாளைய தினம் கேணித்தீத்தத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.