இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.