வரலாற்று சிறப்புமிக்க வண்ணைைம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாசி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டவத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாசி சனி உற்சவத்தின் சனீஸ்வர உற்சவம் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு இ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் கலந்துகொண்டு உற்சவ கிரியையினை நடாத்திவைத்தனர்..
கடந்த 23.09 அன்று முதலாவது சனீஸ்வர உற்சவமும்,07.10, மூன்றாம் சனீஸ்வர உற்சவம்,14.10 அன்று நான்காம் சனீஸ்வர உற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.
பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் எள்தீபமெந்தி தமது நேர்த்திவிரத கடமைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.