பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது.
அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.
மேலும், ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன. இதனால் சிறு முயற்சியாளர் ஒருவரது பெட்டிக்கடையும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.