பு.கஜிந்தன்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றையதினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியில் காலை 9:30 மணி அளவில் ஆரம்பமானது. சம நேரத்தில் கொக்குவில், கோண்டாவில் போன்ற பகுதிகளிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண அவை தலைவர் சி.வீ.கே சிவஞணம், முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர்களான ரவிகரன், சர்வேஸ்வரன், கஜதீபன், சுகிர்தன் மற்றும் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.