(மன்னார் நிருபர்)
(04-10-2023)
ஆசிரியர் தினத்தையொட்டி மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இணைத்து இன்றைய தினம் புதன்கிழமை (4) காலை பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வைத்துள்ளனர்.
-மன்னார் அவ்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் சென் ஜோன்ஸ் கழகம் மற்றும் சுகாதார கழகம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த இரத்ததான முகாம் பாடசாலை அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இடம்பெற்ற குறித்த இரத்த தான முகாமில் குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொடுக்கும் சுமார் 20 ஆசிரியர்கள் இரத்த தானம் செய்து வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.