(மன்னார் நிருபர்)
(04-10-2023)
மன்னார் பேசாலை சென் மேரிஸ் மகா வித்தியாலய சிறுவர்கள் இன்று உலக சிறுவர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலி யை தொடர்ந்து சிறுவர்கள் வர்ண ஆடைகள் அணிந்து கையில் பலூன்களை ஏந்தியவாறு ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
குறிப்பாக வாதை ஊட்டாதீர்கள்,போதையை நிறுத்துங்கள், நல்ல பாதையை காட்டுங்கள், சிறுவர் எமது உரிமையை மதியுங்கள், சிறப்பான வாழ்வை எமக்கு அழியுங்கள், எங்கள் கனவுகள் மெய்ப்பட விடுங்கள், எங்கள் உலகை எங்களுக்கு கொடுங்கள்,எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள், சட்டவிரோத சம்பாத்தியம் உமக்கு வேண்டாம் , சாபமும் பாவமும் எனக்கு வேண்டாம், உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இருந்து பிரதான வீதி வழியாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கிராமப்புற வீதியூடாக சென்மேரிஸ் பாடசாலையை சென்றடைந்தனர்.
மன்னார் மாவட்ட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை அதிகரித்து காணப்படும் நிலையில் குறித்த சிறுவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டி குறித்த சிறுவர்களை குறித்த பாடசாலை ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்து அனைத்து மக்களின் கவனத்தை திருப்பும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.