நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது அரசியல் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உயரதிகாரி வியாழக்கிழமை பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் நிலந்த விஜயசிங்க அரசியல் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகியுள்ளார்.
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்த நிலந்த விஜயசிங்க இவ்வாறு அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்கும் நோக்கிலேயே தற்போதைய தவிசாளரை பதவி விலக நிர்ப்பந்திக்கக்பட்டதாக தற்போதைய தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க. தற்போதைய தவிசாளர் நிலந்த விஜயசிங்காவும் ஓர் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது