பு.கஜிந்தன்
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.
ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions) நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை (06.10.2023) மற்றும் நாளை சனிக்கிழமை (07.10.2023) இந்த தெரிவு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை(08.10.2023) வவுனியாவில் இந்த தெரிவு நடைபெறவுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்க சந்தர்ப்பம் உள்ளது என்பதுடன், வீர வீராங்கனைகளை வெளிநாட்டு கழகங்கள் , சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிக்கிறது.