பு.கஜிந்தன்
வடமாகாண மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் எற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களுக்கான மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனைகள் தொடர் பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஏ.சி.ரஹீம் தலைமையில் நடைபெற்றது.
இதில் போதைப்பொருளை தூண்டும் விளம்பரங்கள், மதுசாரம், புகைத்தலி னால் அரசாங்கத்திற்கு வரும் வருமானம் அரசாங்கத்தினால் வெளிநாடுகள் கிடைக்கும் சலுகைகள், உள்ளூரில் விற்பனையாகும் கஞ்சா, ஐஸ் போதைப் பொருள், சிகரெட் பாவனை
ஆகியவற்றின் பாவனை தொடர்பாவும், இதனால் குடும்பங்களில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களினால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
இதில் வடமாகாண மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் உத்தியோகத்தர் இ.நிதர்சனா, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ம.ரகுராம் ஊடகவியாளர்கள் பங்கு பற்றினர்.