மொன்றியால் வாழ் எழுத்தாளரும் நூலாசிரியருமான சண்முகராஜா வீணைமைந்தன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் வெளியிடப்பெற்றன
நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பெற்ற சில புகைப்படங்கள் இங்கு காணப்படுகின்றன.
மேற்படி நான்கு நூல்களின் வெளியீட்டு விழா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வாழ்த்துரைகள் மற்றும் நூல்கள் பற்றிய ஆய்வுரைகள் ஆகிய இடம்பெற்றன.
முதலில் ஆரம்ப உரையாற்ற கனடா எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் அழைக்கப்பெற்றார். தொடர்ந்து அவர் விழாவிற்கு தலைமை தாங்கும் வண்ணம் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்களை மேடைக்கு அழைத்தார்;
தொடர்ந்து வாழ்த்துரைகள் மற்றும் நூல்களின் ஆய்வுரைகள் ஆகியன இடம்பெற்றன.
காத்திரமான நூல்களாக விளங்கிய எழுத்தாளர் வீணைமைந்தனின் படைப்புக்கள் நேர்த்தியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பெற்றன.
அழைக்கப்பட்ட நண்பர்கள் மற்றும் இலக்கியவாதிகள் வர்த்தகப் பிரமுகர்கள் நூலின் பிரதிகளை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். முதற் சிறப்புப் பிரதியை முன்னாள் கனடிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.