த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோட்’. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரிஷா தனது மறுபிரவேசம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மற்றும் பெரிய கதாநாயகன்களின் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த வாரம் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தி ரோடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தளம் பெற்றுள்ளதாகவும் விரைவில் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.