தமிழரின் தொன்மையை உலகப் பரவலைஆய்வுசெய்த தமிழறிஞர் ஒரிசாபாலு அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதைகலந்த வணக்கங்கள்.
தமிழினத்தின் தொன்மை என்பதுகல்வெட்டுக்களிலும், அகழாய்வுகளிலும்வெளிப்படும் காலமிது. தரையில் கிடக்கும் இந்ததடயங்களைவிட ஆயிரக்கணக்கான தடயங்கள்கடலில் மூழ்கிப்போயுள்ளது என்பதை கடலாய்வின்வழியாக வெளிக்கொண்டு வந்து தமிழின் தமிழரின்தொன்மையை உலகறியச் செய்தவர் ஒரிசா பாலுஎன உலகால் அறியப்பட்ட பாலசுப்பிரமணியன்அவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைகடல்கோள் நிகழ்ந்து வருகின்றது என்பதையும்,ஒவ்வொரு கடல்கோளிலும் சுமார் ஒரு கிமீநிலத்தை கடல் விழுங்கி விடுகின்றது என்பதையும்,தமிழகக் கடலுக்குள் 30 கிமீ வரை மனிதக்கட்டுமானங்கள் மூழ்கிக் கிடப்பதையும் ஆய்வுரீதியாக நிறுவியவர் ஒரிசா பாலு அவர்கள்.
இவரது ஆய்வுகள் தமிழரின் தொன்மையைதமிழரின் கடலாதிக்கத்தை, தமிழரின் வணிகமேலாண்மையை, தமிழரின் வானியல் அறிவைஉலகம் அறியச் செய்தன. தமிழ் சமூகம் இதற்காகஅவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றது. அவரதுமறைவு தமிழ் ஆய்வுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வு ஒன்றில் இவர்உரையாற்றியதை இந்நேரத்தில்நினைவு கூர்கின்றோம். அவரை இழந்த அவரது குடும்பத்தினரதும், உறவினர்களினதும் கரங்களைப் பற்றிக் கொள்கின்றோம். அவரது மறைவுஉலகளாவிய தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆய்வினை முன்கொண்டு செல்ல தமிழர்கள் முனைவது ஒன்றே அவருக்குதமிழ்ச் சமூகம் ஆற்றும் நன்றிக் கடனாக இருக்கும்.
விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்