கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் பினு.பி.கமால் நகைச்சுவை நடிகர். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும், சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிலமேலுக்கு கேரளா அரசு பஸ்ஸில் புறப்பட்டு சென்றார். அவரது இருக்கைக்கு அருகில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார்.
திருவனந்தபுரம் அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, நடிகர் பினு கமால் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கூச்சலிட்டார். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இந்த சமயத்தில் நடிகர் பினுகமால் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினார்.
அதை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டி சென்றனர். இந்த சமயத்தில் வட்டப்பாறை போலீசாரும் அங்கு வந்தனர். நடந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து பினு கமாலை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீசில் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.