லால் சலாம் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்துடன் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், கபில் தேவ உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லால்சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கலையொட்டி லால் சலாம் படம் வெளியாகவுள்ளது.