அஜித் தனது 63 ஆவது படத்திற்கு வாங்கப் போகும் சம்பளம் குறித்த தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் அஜித் நடிக்கும் 63 ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.
அஜித் தனது 63 ஆவது படத்திற்கு ரூ. 163 கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.