ஸ்காபுறோ மத்திய தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது
மேற்படி வைபவம் கடந்த புதன்கிழமை மாலை ஸ்காபுறொவில் அமைந்துள்ள ‘கென்னடி கொன்வென்சன் விழா மண்டபத்தில்’ நடைபெற்றது.
சுமார் 400 அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் அங்கு கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் உரையை செவிமடுத்தனர்.
அழைக்கப்பெற்ற தமிழ் பேசும் அன்பர்களும் ஆதரவாளர்களும் அங்கு வருகை தந்து சல்மா சாகிட் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களில் வர்த்தகப் பிரமுகர்கள் சங்கர் நல்லதம்பி. அவரது பாரியார் மற்றும் ராம் ராம் குமார் உட்பட கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.