பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில்,இன்று நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய கடமை ஆகும்.
எனவே, இன்றய தினம் நடைபெறவுள்ள பாடசாலைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு, கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். யதார்த்த பூர்வமான முடிவு எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
எது எப்படி இருந்தாலும், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று புறக்கணிக்குமாறு எமது மாணவச் செல்வங்களை உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம். பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.
இன்று நிச்சயிக்கப்பட்டுள்ள பரீட்சையை, வேறு ஒரு தினத்தில் கல்வித் திணைக்களம் தாராளமாக நடாத்த முடியும். எமது ஒத்துழைப்பும் அதற்கு இருக்கும் – என்றுள்ளது.