‘கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் உள்ள ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உதயன் பல்சுவைக் கலைவிழா-2023’ மண்டபம் நிறைந்த விருந்தினர்கள் பார்வையாளர்களோடு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் பிரதம விருந்தினராக சுவிற்சலாந்து வாழ் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக மதிசயன் பணியாற்றினார்.
வரவேற்புரையை உதயன் குழுமத்தின் நீண்ட நாள் நண்பர் பாஸ்டர் சோதி நிகழ்த்தினார்.
நடனங்கள் கவிதா நிகழ்வு உரைகள் என தொடர்ச்சியாக மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான ‘ஆரோசை’ குழுவினர் வழங்கிய இனிய மெல்லிசை நிகழ்ச்சி .இடம்பெற்றது. இதில் சிறப்புப் பாடகராக தமிழகத் திரைத்துறைப் பாடகர் வி. எம். மகாலிங்கம் மேடையை சிறப்பாக நகர்த்திச் சென்றார். அவரோடு உள்ளுர்ப் பாடக பாடகிகள் பெருமளிவில் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
மேற்படி உதயன் பலசுவைக் கலைவிழாவில் 3 சமூக சேவையாளர்களுக்கு ‘ உதயன் சமூக சேவை விருது-2023 ‘ என்னும் கௌரவம் வழங்கப்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல அரசியல் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
உதயன் பிரதம ஆசிரியருக்குரிய கௌரவங்களை பல்வேறு தரப்பினர் வழங்கினர். கலை நிகழ்ச்சிகளை வழங்கியவர்கள் மேடையில் கௌரவிக்கப்பெற்றனர்.
— சத்தியன்-