கனடாவில் இயங்கிவரும் 3 கிளைகள் கொண்ட ‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்பெற்று 21 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த சிறப்பான வைபவத்தில் உ ரிமையாளர்களும் ஊழியர்களும் 21வது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தற்போது மிசிசாகா மற்றும் வன்குவர் மற்றும் ஸ்காபுறோ ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ‘ஹோட்டல் சரவணா பவன்’ நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கும் தொழிதிபரும் வர்த்தகப் பிரமுகரருமான கணேசன் சுகுமார் அவர்கள் இந்த சிறப்பான வைபவத்தை தனது ஸ்காபுறோ கிளையில் ஏற்பாடு செய்திருந்தார்.
அன்றைய தினம் இங்கு 21 வருடங்கள் கடமையாற்றிய பிரதம சமையல் வல்லுனர்கள் மற்றும் ஏனைய தர ஊழியர்கள் மற்றும் பத்து வருடங்கள் பணியாற்றிய ஊழியர் என அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுப் பத்திரங்களும் பொற்கிழிகளும் வழங்கப்பெற்றன.
‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் தலைமை அலுவலகம் தமிழ்நாட்டில் இயங்கினாலும் கனடாவில் 3 கிளைகளையும் நேர்த்தியாக நிர்வகித்து வரும் கணேசன் சுகுமார் அவர்களையும் பணியாளர்களையும் அனைவரும் பாராட்டுகின்றனர்