கனடாவில் பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் பிக்கரிங் அருள்ஜோதி சிவனாலயம் 1400 Bayly St Unit 13B, Pickering, ON L1W 3R2 என்னும் விலாசத்தில் இயங்கிவருகின்றது.
இங்கு கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற நான்காம் நாள் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூசைகள் மற்றும் அபிசேகங்கள் ஆகியன இடம்பெற்று வசந்த மண்டபப் பூசையும் இடம்பெற்றது. தொடர்ந்து திருமதி ஜனனி ரவிசங்கர் ஆசிரியையின் சக்தி நர்த்தனாலய மாணவிகள் வழங்கிய பரத நாட்டியம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிக்கரிங் சிவனாலய கலா மன்றத்தின் குருவும் ஸ்தாபகருமான திருமதி சௌமியா ரவிகுமாரின் மாணவிகள் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இரண்டு கலை நிகழ்வுகளுமே சிறப்பாக நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம குருக்கள் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய ஆசிரியைகளையும் மாணவிகளையும் கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களை வழங்கினார்கள்
ஆலயத்தின் தொலைபேசி இலக்கம் :-(647) 989-6943