(22-10-2023)
தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள்.
இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியுள்ளது.
குறித்த சாதனை நிகழ்வுகள் 21-10-2023 மாலை 4. மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று 22-10-2023 அன்று காலை 3. மணியளவில் கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து மதியம் 1. மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர் .
குறித்த சாதனை மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர்கள் உட்பட பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த சாதனை நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்தார்கள்.
இவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.
மேலும் பல அனுசரணையாளர்கள் உடன் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கான இணை அனுசரணை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.